உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஅன்னை திரேசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் அறிவித்துள்ளார்.இதற்கமைய எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அன்னை திரேசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

மூளையில் பல கட்டிகள் இருந்த பிரேசில் மனிதரை கடந்த 2008 ஆம் ஆண்டு அன்னை திரேசா குணமாக்கியதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.இந்நிலையிலேயே அன்னை திரேசா இறையாற்றலுடன் நிகழ்த்திய இரண்டாவது அற்புதத்தை வத்திக்கான் அங்கீகரித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமது வாழ்நாள் முழுதையும் ஏழைகளுக்கு உதவி வழங்குவதில் செலவிட்ட அன்னை திரேசா நோபல் பரிசையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கடந்த 1997 ஆம் ஆண்டு தனது 87 ஆவது வயதில் அவர் காலமானார்.

இதனையடுத்து இந்திய பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த கட்டி அன்னை திரேசாவினால் சுகமடைந்தாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் முத்திப்பேறு  பட்டத்தை வழங்கினார்.

இந்நிலையிலேயே அன்னை திரேசாவிற்கு புனித பட்டம் வழங்கும் நிகழ்வு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வத்திக்கானில் நடைபெறுமா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

இதேவேளை, யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் 1910 ஆண்டு ஒகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி பிறந்த அவர் இளம்வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாயாரினால் வளர்க்கப்பட்டார்.

 

அத்துடன் 1929 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இவர் லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

 

மேலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் வழங்கியதுடன் தொழு நோயாளிகளுக்கு என `ப்ரேம் நிவாஸ்’ இல்லம் ஒன்றயும் ஆரம்பித்தார்.

இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கம் அன்னை திரேசாவிற்கு கடந்த 1980 ஆம் ஆண்டு `பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்ததுடன் உலக அமைதிக்கான நோபல் பரிசும் கடந்த 1979 ஆம் ஆண்டு  வழங்கப்பட்டது.

மேலும் 1962 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1962 ஆம் ஆண்டு  பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971 ஆம் ஆண்டு பாப்பரசரின் உலக சமாதானப் பரிசு,  அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்’ விருது, 1972 ஆம் ஆண்டு சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976 ஆம் ஆண்டு சாந்தி நிகேதனில் கலாநிதி பட்டம் ஆகியனவும் அன்னை திரேசாவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்