உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஏமனில் பொது மக்கள் போராட்டம் நடத்தினர். லட்சக்கணக்கானோர் திரண்டனர். அதிபர் பதவி விலக வலியுறுத்தி துனிசியாவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அதிபர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.

தற்போது அங்கு புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து எகிப்திலும் இதே நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவற்றின் பக்கத்து நாடான ஏமனிலும் போராட்டம் வெடித்துள்ளது. இங்கு அலி அப்துல்லா சலே அதிபராக உள்ளார். இவர் 32 ஆண்டுகளாக இப்பதவி வகிக்கிறார். எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி அரசுக்கு எதிரானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து தலைநகர் சனா தெருக்களில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

அரசுக்கு எதிராகவும், அதிபருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். டாலி, ஷப்வா மாகாணங்களுக்கும் ஆர்ப்பாட்டம் பரவியது. அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அல்-ஹடேதா மாகாணம் செங்கடல் பகுதியில் உள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது. எனவே, இங்கும் பல்லாயிரக் கணக்கானோர் ரோடுகளில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அதிபர் சலே பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது கலவரமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்