Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



amy_searight_002இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் அமி சீரைட், கொழும்பி்ல் நேற்று பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் போச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.கூட்டுப்படைகளின் தலைமையகத்தில், கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவையும், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவையும், விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத் சிங்களவையும் கலாநிதி அமி சீரைட் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவாக்குதல் மற்றும், இலங்கை படைகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தே, அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கை படைகளை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா வலியுறுத்தி வருவதுடன், அதற்கான உதவிகளை வழங்கவும் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ள, கலாநிதி அமி சீரைட், பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இதுபற்றி தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்