தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivetமட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட கணவனும் மனைவியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

இவர்கள் பயணம் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் வாகரை கஜீவத்தை என்னும் இடத்தில் பாதையினை விட்டு விலகி எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதியதினால் இவ்விபத்து சம்பவித்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி வேலுரினைச் சேர்ந்த க.விவேகானந்தராசா வயது 52 என்பவர் சம்வ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா வயது 49 என்பவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவரின் சடலம் தற்போது வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்