உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesதமிழ் மக்கள் பேரவை எனும் புதிய அமைப்பு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ  குடைச்சல் கொடுப்பதற்கான அமைப்பும் அல்ல. அது ஒரு அரசியல் கட்சியும் இல்லை. என தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கை குழு உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் பேரவை என்பது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கவே உருவாக்க பட்ட அமைப்பு எனும் தொனியில் சொல்லப்படுகின்றது.இவ்வாறன அமைப்பு உருவாவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது சம்பந்தன் அவர்களது அரசியல் தலைமை.

ஏனென்றால் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என இருக்கும் சூழ்நிலையில், பாராளுமன்றத்தை ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் ஒரு சபையாக மாற்றம்  பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான இன பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தை  தமிழ் மக்கள் மத்தியில் வைத்து, இது சம்பந்தமாக மக்களின் ஆலோசனைகள் என்ன ? புத்திஜீவிகளின் ஆலோசனை என்ன ? தமிழ் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் மட்டகளப்பில் பல்கலைகழகம் இருக்கின்றது அந்த பல்கலைகழக மட்டத்தில் என்ன சொல்கின்றார்கள், எவ்வாறான கோரிக்கைகளை தமிழ் மக்கள் வைத்துள்ளார்கள், என்பதனை அறிந்து ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவது தான் சரியான வழிமுறையாக இருக்கும்.

ஆனால் அவ்வாறன எந்தவிதமான விடயமும் அல்லாது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே என்ன விதமான அரசியல் தீர்வு வர போகின்றது, என தெரியாமல் ஒருவர் இருவர் தாம் விரும்பும் அரசியல் தீர்வை பற்றி பேசுவது, என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் தலைவிதி என்பது, ஒருவர் இருவரின் கைகளில் இல்லை. அவர்கள் இந்த விடயத்தை சரியான முறையில் கையாண்டு இருந்தால், புதிய அமைப்பு உருவாக வேண்டும். என்ற அவசியம் இருந்து இருக்காது.

இது சம்பந்தனுக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுப்பதற்கான அமைப்பும் அல்ல. அரசியல் கட்சியும் இல்லை. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளை கையாள்வதற்கும் தேசிய பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தை உருவாக்க வேண்டும். என்றும் அந்த தீர்வு திட்டத்தை பாராளுமன்ற அரசியல் சாசன சபையில் பேசப்பட வேண்டும் என்றால் , அந்த தீர்வு திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக முன் வைக்கப்படலாம்..

இவ்வாறான அமைப்பை எதிர்க்க வேண்டிய அவசியம் சம்பந்தனுக்கோ அல்லது அவருடன் சேர்ந்தவருக்கோ இருக்காது. மாறாக மக்களோடு சேர்ந்து தீர்வுத்திட்டத்தை உருவாக்கி கொடுத்தால் , பாராளுமன்ற தலைமைகள் அதனை பார்த்து அதில் உள்ள நல்ல விடயங்களை ஏற்றுக்கொண்டு, அதனை எவ்வாறு அரசியல் சாசனத்தில் உள்ளடக்க வேண்டும், என்பதனை யோசிக்க வேண்டும்.

இந்த அமைப்பு அவர்களுக்கு எதிரான அமைப்பு என்ற தோற்றப்பாடு அவசியமற்றது.
இதில் வடக்கு கிழக்கில் உள்ள புத்திஜீவிகள் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள்.உள்ளவாங்க பட்டு உள்ளார்கள். இது அரசியல் கட்சி அல்ல , அரசியல் கட்சிக்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் வேறு பிரச்சனைகள்.

இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் போதை வஸ்து பழக்கங்களை இல்லாது ஒழிக்க வேண்டும். கல்வி , சுகாதாரம் போன்ற விடயங்களில் வடகிழக்கு மாகாணங்கள் பின் தங்கி உள்ளன அவற்றை முன்னுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறன சமூக நலன்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை முன்னிறுத்தி தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்க பட்டு உள்ளது. அந்த வகையில்  அதனை பார்க்க வேண்டுமே தவிர, அதற்கு சிவப்பு பச்சை சாயம் பூசி குடைச்சல் கொடுபதற்கு வருகின்றது, பிளவை ஏற்படுத்தி உள்ளது,  என்று வேறு வேறு வியாக்கியானங்கள் கற்பிப்பது என்னை பொறுத்த வரையில் தவறான விடயம் என கருதுகின்றேன் என தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்