உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால், அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.

டூனிசியாவில் இடம்பெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எகிப்தின் முக்கிய நகரங்களான கெய்ரோ, சூஸ், அலெக்ஸ்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சூஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேரும், கெய்ரோ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.

இதேநேரம் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.

30 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். இதில் இளைஞர்கள் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இணையத்தளங்கள் மூலமாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் குறிப்பிட்ட இணையத்தளங்களை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. இதேநேரம் எகிப்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு முபாரக் நிர்வாகத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்