Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்ட் உள்ளிட்ட குழுவினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றதாக தெரியவருகிறது.

இதன்போது, தமிழ்க் கூட்டமைப்பின் மிதமான அரசியல் நகர்விற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சரியான தீர்வை எட்டமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியிருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்