உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஊடகவியலாளர்கள் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜோரிக் தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்