உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஜேர்மனியில் உள்ள மாக்டெபர்க் நகரில் இருந்து ஹால்பெர்ஸ்டேட் நகருக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. கிழக்கு ஜேர்மனியில் உள்ள சல்சோனிக்கும் அன்ஹால்ட் நகருக்கும் இடையே சென்ற போது இதன் மீது சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது.

இதை தொடர்ந்து ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தடைபட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்