உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், வாள்களால் தலைகளை வெட்டித் துண்டித்தும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த சுமார் 300 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், நூற்றுக்கணக்கான மக்களை பிணைகைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்