உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அச்சுவேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் மோட்டர் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞனே பலியாகியுள்ளார். படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளõர். விபத்தில் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த இராசதுரை ரஜீவன் (வயது 21 என்பவரே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இராசதுரை யசிந்தன் என்பவரே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

வடமராட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானும் வடமாரட்சியில் இருந்து நீர்வேலியை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கு இலக்கான இருவருக்கும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்