உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கனடிய நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Saskatchewan மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் உள்ளூர் நேரப்படி 13.00 மணியளவில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாக்குதல் நடத்திய மர்மநபரை பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தின் எதிரொலியாக அருகாமையில் இருக்கும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உலக பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றிருக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பள்ளியி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன், மேலும் கனடாவில் தற்போதைய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சகம், காவல்துறையிடமிருந்து அறிந்துகொண்ட நான், பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளேன்.

பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், காயமுற்ற நபர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், 1989 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள Montreal’s Ecole Polytechnique கல்லூரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 14  கல்லூரி மாணவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்