உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledதமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வு திட்ட வரைபை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டால் அதனை பரிசீலிக்கத் தயார் என்று இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்தை தமிழ் மக்கள் பேரவை வரவேற்றுள்ளது.இந்த விடயம் குறித்து தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை தாம் தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கவுள்ளதாகவும் அக் குழு தெரிவித்தது.இதனை பேரவை ஆரம்பிக்கப்பட்டபோதே தீர்மானித்திருந்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு அமையும் என்றும் ஏற்பாட்டுக் குழு கூறுகின்றது.

மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வுத்திட்ட வரைபு இறுதி வடிவம் என்றும் அதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவை ஈடுபட்டுள்ளது என்றும் ஏற்பாட்டுக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்