உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று அவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் அரசாங்கம் குறித்த வழக்கு தொடர்பில் படைவீரர்களின் உறவினர்களையும் கைதுசெய்வதாக வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்