உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின்  உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

தாலிபனுக்கு எதிரான கிளர்ச்சித் தடுப்பு பிரிவு அமைந்துள்ள தேசிய சிவில் ஒழுங்கு காவல்துறையின் தலைமையகத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.கடந்த மாதத்தில் காபூலில் பல தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில் கார் இருந்தப்படி இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.பின்னர் மக்களின் மத்தியில் இருந்த தீவிரவாதி ஒருவர் வெடிக்குண்டை வெடிக்க செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு   தாலிபன் இயக்கம்  பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்