Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான குறித்த பெண் 7 கிலோ தங்கத்தையும், 70 தங்க பிஸ்கட்டுகளையும் கடத்துவதற்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி – குற்றப்புலானாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண்னை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 84 ஆயிரம் ரூபா, 100 கனேடிய டொலர்கள், 7 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1000 இந்திய ரூபாய்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்