உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிரியாவில் ஒரே நகரில் அடுத்தடுத்த நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 46 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரின் அல்-சிடீன் என்ற சாலையில் சற்று முன்னர் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் சில நிமிடங்கள் இடைவெளியில் இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து மாகாண ஆளுநரான Talal Barazi வெளியிட்டுள்ள தகவலில் 25 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள தகவலில், இந்த வெடிகுண்டு தாக்குதலில் 46 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், 110 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், இந்த தாக்குதலில் ஒன்று தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், கடந்த மாதம் இதே பகுதியில் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதுடன், இதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுபேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்