உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமல்லாகம் பகுதியில் ஆயுத முனையில் அச்சுறுத்தி, கொள்ளையிடப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இந்த கொள்ளைச் சம்பவத்தில் 22 பவுண் நகையும், இரண்டு இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதுதொடர்பில் எவரையும் கைதுசெய்யவில்லை என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை, மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றில் முகமூடி அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் வீட்டினுள் நூழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.இந்தச் சம்பவத்தின் போது வீட்டில் பெண்களே இருந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 22 பவுண் நகையும் இரண்டு இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த, சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்க, யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்கும் விரைந்து செயற்படுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தட்டாதெரு சந்தியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இன்று அதிகாலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸார் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள அதேவேளை, அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுக் கலாசாரம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்