Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வட மாகாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஏற்கனவே வடக்கில் 1000க்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

காணி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் அசாதாரண நிலைமைகள் காரணமாக மக்கள் வெளியேறிய இடங்களில் காணி ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களில் பல்வேறு பிழைகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் காணிகளை பிள்ளைகளுக்கு எழுதவோ அல்லது வியாபாரத்திற்காக விற்பனை செய்யவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை ஆராய பிரதமர் குழு ஒன்றை நியமித்துள்ளார் என்று கூறிய அவர் அக்குழு காணி தொடர்பான சட்டமூலத்தை தயாரித்து வருவதாகவும் எதிர்வரும் மே அல்லது யூன் மாத்திற்குள் தயாரிக்கப்படும் குறித்த சட்டமூலத்தினால் மக்களுக்கு நன்மை கிட்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்