Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



banki%20moon_CIஇலங்கை போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பணி, மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பத்தாண்டு கால பூர்த்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் மனித உரிமை விவகாரங்களில் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.புருண்டி, தென்சூடான், இலங்கை, சிரியா மற்றும் பல நாடுகளில் மனித உரிமை விவகாரங்களிலும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பங்களிப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை, சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களை இணைக்கும் பணிகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முதன்மையாக மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்