உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesஇராணுவ தலைமையகத்தில் தன்னை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்யுமாறு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த சந்தேக நபரை விடுதலை செய்தது போன்று, இராணுவ தலைமையகத்தில் புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறையில் இருக்கும் மொரிஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்தமையானது நல்லிணக்கத்திற்கான முக்கியமான நடவடிக்கையாகும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த போது, 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி அவரை இலக்கு வைத்து இராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொன்சேகா படுகாயங்களுக்கு உள்ளானார். குணமாகி பணிக்கு திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போர் வரை இராணுவ தளபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்