உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ரஷிய அதிபர் மற்றும் பிரதமர் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய அதிபராக டிமிட்ரி மத்வதேவும், பிரதமராக விளாடிமிர் புதினும் பதவி வகிக்கின்றனர். இவர்கள் இருவர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து ரகசியமாக ஆடம்பர அரண்மனைகள் மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் 24 இடங்களில் ஆடம்பர ரகசிய அரண்மனைகள் உள்ளன. அவற்றில் 6 அரண்மனைகள் அதிபர் டிமிட்ரி மத்வதேவுக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே பிரதமர் புதினுக்கு மட்டும் ரூ.420 கோடி மதிப்புள்ள அரண்மனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கருங்கடல் பகுதியில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை தவிர அதிபரும், பிரதமரும் வாங்கி குவித்துள்ள மாளிகைகள், வீடுகள், அரண்மனைகள் பனிச்சறுக்கு மையங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவர்களிடம் உள்ள அரண்மனைகளின் படங்கள் கடந்த மாதம் இன்டர் நெட் மற்றும் பத்திரிகைகளில் பிரசுரமாகின. ஆனால், இந்த குற்றச்சாட்டை பிரதமர் புதினின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்