உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


விளக்குபவர். அழ.பகிதரன் முகாமையாளர்.சங்கானை இலங்கை வங்கி .>>>> யாழ்ப்பாண மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வெளிநாட்டு உழைப்பில் வாழவே இன்றைய பொருளாதார நிலமை இடமளிக்கின்றது. 1977இலிருந்து சுயபொருளாதார கட்டமைப்பிலிருந்து விலகி திறந்த பொருளாதாரத்திற்குள் நுழைந்த‍தன் விளைவு இது. யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஆசிரியருக்கு ஒருமாத‍த்திற்கு ரூபா25000க்குள்ளாகவே சம்பளம் கிடைக்ககூடியதாக இருக்கின்றது. ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு இன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தினமொன்றுக்கு 1000 ரூபா தேவை.அவ்வாறென்றால் அந்த குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 30000.00 ரூபா தேவை. இந்த நிலமையில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் கட்டுப்படியாகும். இது மத்தியதர வர்க்கத்தின் நிலமை. ஆனால் அடித்தட்டு மக்களின் நிலமை. கடைச்சிப்பந்திகளுக்கு மாதம் ரூபா2000இலிருந்து 8000 வரை மட்டுமே சம்பளம் வழங்கும் நிலமை இருப்பதாக அறிகின்றேன். இந்த நிலையில் தான் யாழ்ப்பாண மக்கள் புலம்பெயர்ந்த மக்களின் உதவியை கோரவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள். 

இந்த கடைச்சிப்பந்திகள் தாங்களும் வெளிநாட்டுக்கு செல்லவிரும்புகின்றார்கள் என்பதே யதார்த்தமான உண்மை நிலையாகும். பாதுகாப்பு ஊழியர்களுக்கு ரூபா8000 இலிருந்து 15000 வரை சம்பளம் கிடைக்க கூடியதாக இருக்கின்றது. நானால் அந்த வேலை இப்போது ஒப்பந்த அடிப்படையில் கம்பனி ஊடாகவே வழங்கப்படுகின்றது. மேசன் தொழிலாளிகளுக்கு மாதமொன்றுக்கு 8000 ரூபாவிலிருந்து 16000 ரூபாவுக்குளே வருமானம் வரக்கூடியதாக இருக்கும். இவர்களும் டோகாவுக்கோ அல்லது அதுபோன்ற சிறு நாடுகளுக்கு போகத்தான் விரும்புகின்றார்கள். இந்த சூழலில் தான் நாம் எமது கிராமத்தின் புலம் பெயர்ந்த கிராமத்தவரின் பங்களிப்பில் விருப்புள்ளவர்களாக இருக்கின்றோம்.

25 Responses to “எமது ஊரின் பொருளாதார நிலமை”

 • Chandrahasan:

  ஒற்றுமைக்கான கோசம் அரசியலில் எப்போதும் ஏகபோக உரிமை கோருவதற்க்காகவே என எடுத்துக்கொள்ளலாம். இது தேச அரசியலில் மட்டுமன்றி கிராம அரசியலிலும் விரவிக் கிடக்கிறது. மாற்றுச் சிந்தனைகள் தங்கள் இருப்பை கேள்விக் குறியாக்கிவிடும் என்ற அச்சத்திலேயே ஒற்றுமை என்ற கோசத்துள் ஒளிந்துகொண்டு மாற்றுக் கருத்துக்கள்ள அமுக்கிவிடும் போக்கு காணப்படுகிறது. இந்த ஒற்றை சிந்தனை போக்கு எல்லோருக்கும் பேரழிவையே தரும் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத் தந்து காலம் அதிகம் ஆகிவிடவில்லை. ஆகவே ஆராச்சி வேண்டாம் அறிவு வேண்டாம் விவாதம் வேண்டாம் மந்தைகள் போல முன்னோர் போன வழியில் போவோம் என மாற்றுக் கருத்தின் குரல்வளையை நசுக்க வேண்டாம். எல்லோருடைய கருத்துக்களும் கேட்கப்படவேண்டும். கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முட்டாள்தனமாக தெரிந்தாலும் கூட.

 • அழ பகீரதன்:

  சிவானந்தம் அண்ணர் அவர்களுக்கு நீங்கள் ஊரில் அக்கறை உடையவராக இருப்பதை இட்டு எனக்கு மகிழ்ச்சி. உங்களைப்போல் எல்லாரும் இல்லை. முக்கியமாக புனை பெயர்களில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் அவ்வாறானவர்களாக இருக்கமுடியும் என நான் நம்பவில்லை். புனை பெயரில் எழுதுவது சுலபமானது சொந்த பேரில் எழுதுவது மிகவும் கடுமையானது.அது உங்களுக்கும் புரியும். சொந்த பெயரில் எழுதினால் நாம் அவர்களுடன் இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கலாம். புனைபெயரில் மன்ற பொடியள் நல்லது செய்யுறாங்கள் என்று சொல்லுவதுக்காக நன்றி சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை. அவ்வாறு சொல்லுவதை சொந்தப்பேரில் சொல்லுவதற்கு என்ன தயக்கம். நான் பல் வேறு பேர்களில் எழுதுவதாக சொல்கின்றீர்கள். உங்களைப்பற்றி கூட ஒரு இடத்தில் சொந்தப்பேரில் எழுதியிருக்கின்றேன். மறைந்திருந்து எழுதுவது எனது வழக்கமில்லை. நான் யமன் காயுதன் என்ற புனைபெயர்களில் எழுதியிருக்கின்றேன். தேவையில்லாமல் நான் பல்வேறு பெயர்களில் எழுதுவதாக புரளி கிளப்பவேண்டாம். உங்களைப் போல் முன்வைத்த காலை பின்வைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது.

 • வணக்கம் தோழர்களே .இன்று நான் கனடாவில் இருந்து பேசுகிறேன்.அன்று நான் பண்ணாகத்தில் நிற்கும் போது ஒரு விதமான சாதிய வெறியும் ஒரு தடிப்பும் என்மனதில் உலா வந்தது. சுழிபுரம் பிரதான வீதிக்கு வரும் அப்பாவி இளையர்கள் வைத்து அடிக்கும் பழக்கம் என்னில் இருந்து வந்தது.ஆனால் இன்று அந்நிய தேசத்துக்கு வந்த பின் ஏன் எங்கள் அயலவர்களை கள்ளர் காடார் போல் பார்த்தோம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.ஏன் என்றால் இந்த நாட்டுக்காரர் பார்ப்பது நாங்கள் உங்களை பார்த்தது போல்.

 • அழ பகீரதன்:

  நீங்கள் சொல்லுகின்ற ஊர் ஒற்றுமையை ஏற்படுத்த நடுக்குறிச்சியான் தயாராக இருக்கின்றாரா? புனை பெயரில் ஒழிந்து நின்று கொண்டு ஊர் பற்றி விபரிப்பதில் என்ன இருக்கின்றது. ஒரு பதினைந்து வருடத்துக்காவது வெளிநாட்டிலிருப்பவர்கள் ஊருக்கு காசு அனுப்புவார்கள் என்று தான் நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற‍ம். ஒருவேளை நடுக்குறிச்சியானுக்கும் அந்த நோக்கம் இருக்கலாம்.

  • Sivanantham.S:

   ஊரிலிருந்து கருத்து வழங்குபவர்கள் புனைபெயரைப் பாவிப்பதில் தவறேதுமில்லை. ஆனால் நடுக்குறிச்சியான் வழங்கிய கருத்து மிகவும் வரவேற்கக் கூடியதே. அதுவும் அவர் தாங்கள் தலைமை வகிக்கும் மறுமலர்ச்சி மன்றத்தினரின் சேவைகளைப் பற்றிக் கூறி, பாராட்டி மன்றத்திற்கூடாகவே உதவிகளை வழங்குமாறு கேட்டிருந்தாரே. அப்படிப்பட்டவரா ஒற்றுமைக்கு முரணாக இருப்பார்? தாங்களே பல்வேறு பெயர்களைப் பாவித்து கருத்துக்கள் வழங்கும் போது ஏனையவர்கள் பாவிப்பதில் என்ன தவறு இருக்கிறது? தற்போது இந்த இணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில கருத்துப் பரிமாற்றங்கள்தான் ஒற்றுமையையும், ஒத்துழைப்புக்களையும் சீர்குலைக்கும்போல் தெரிகின்றது. தயவு செய்து மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமைகளை வளர்க்கும் கருத்துக்களை எழுதாது மக்கள் ஒற்றுமையை வளர்த்து தங்களதும், மக்களதும் நல்நோக்கங்களைப் பூர்த்தி செய்ய வழி கூறும் நற்கருத்துக்களை எழுத முற்படுங்கள்.
   நன்றி!

 • Sivanantham.S:

  நடுக்குறிச்சியான் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. குறைந்த வருமானமுடைய தொழில் செய்பவர்களைவிட விதவைத் தாய்மார்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாகும். நோர்வேயிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூட வன்னிப்பகுதிகளில் வாழ்கின்ற விதவைத் தாய்மார்கள் தமது குழந்தைகளுடன் அநுபவிக்கின்ற துன்பத்தைப் பற்றி கடந்த வருட இறுதிப் பகுதியில் வெளியிட்ட தமது அங்கத்தவர்களிற்கான மாதாந்த வெளியீட்டில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். புலம் பெயர்ந்து வாழும் எம்மூர் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆலயங்களுக்கு மட்டுமன்றி அல்லல்படும் மக்களுக்கு அள்ளி வழங்குவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்பது கடந்த காலங்களில் அவர்கள் அல்லலுற்ற எம்மினத்திற்காக தமது இடது கைக்குத் தெரியாது வலது கையால் வழங்கியதைப் பற்றி வெளியூர் நண்பர்கள் சிலர் வியந்து கூறியதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படியான எம்மூர் மக்கள் உரிய நேரத்தில் உதவி தேவைப்படுவோருக்கு அள்ளி வழங்கத் தயங்கமாட்டார்கள். எனவே தேவையற்ற வாதப்பிரதி வாதங்களைத் தவிர்த்து மக்களுக்கு நன்மை பயக்கும் நல் நோக்கங்களை தகுந்த திட்டமிடலுடன் செயற்படுத்த முயற்சியுங்கள். இத்தகைய வாதப் பிரதி வாதங்கள் மக்களிடையே கசப்புணர்வுகளையும், ஒற்றுமையீனத்தையுமே வளர்க்குமே ஒழிய நந்நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படாது. இன்று இயற்கையும் எம் மக்களை துன்புறுத்த தொடங்கிவிட்டது. சிந்தித்துச் செயலாற்றுவதே சிறப்புக்களைத் தரும்.

  நன்றி!

 • அழ பகீரதன்:

  அப்ப உங்களுக்கு புடவைக்கடையில வேலை செய்யிற பொடியளின்ர வறுமை தெரியவில்லையோ. அல்லது குறை ஊதியத்துக்கு வேலை செய்விக்கின்றதை நீங்கள் நாயப்படுத்திகின்றீர்களா? கடைச்சிபந்திகளுக்கு போதிய ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்பது தான் என்கருத்து.புடவைக்கடை முதலாளிமாருக்கு சங்கம் இருக்குது. ஆனால் புடவைக்கடையில் வேலை செய்யும் ஊழியருக்கு சங்கமில்லை. கடினப்பட்டு தான் எங்களூரில் உழைக்கின்றார்கள். வேலையில்லாமல் இங்கு ஒருவருமில்லைத்தான்.ஆனால் இவர்களது உழைப்புக்கு ஊதியம் போதாது என்பது தான் என் வாதம். என்னைக்கேட்டால் கடைச்சிப்பந்திக்கு 8 மணிநேர வேலைக்கு குறைந்த பட்சம் 10000 ரூபா மாத சம்பளம் கொடுக்கப்படவேண்டும்.இலங்கைச் சட்டத்தின் படி அத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றையும் வழங்க வேண்டும். அத்துடன் அவர்களை வேறு இருக்க கூடிய ஓய்வூதியத்திட்டங்களிலும் இணைத்துக்கொள்ளவேண்டும்.

  • இளையவன்:

   வணக்கம் பகி அண்ணா.நடுக்குரிச்சியன் சொல்லுவதில் விஷமமும் இருக்கோ இல்லையோ விஷயம் இருக்குதானே .புடவைக்கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் எம் இளைஞர்கள் ஏன் தொழில் பயிற்சி பெற்று வேலை செய்யகுடாது ,மனதில் பட்டத்தை பட்டேனே கேட்டிடேன் தப்பெண்டல் மன்னிஹ்சுபோடுங்கோ .
   அன்புடன் இளையவன்

 • நடுக்குறிச்சியான்:

  புலம்பெயர்ந்த எமது சகோதரங்களுக்கு நான் அறியத்தருவது. ஊரை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு ஊருக்கு ஏதாவது செய்யத்துணியவும். இன்று எமது கிராமத்தை சுற்றி வட்டுக்கோட்டை தொல்புரம் சுழிபுரம் சங்கானை சண்டிலிப்பாய் இதைவிட கொக்குவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி வழங்குவதற்கு பல தொழில்நுட்ப கல்லூரிகள் உண்டு. இங்கு ஆறு மாத பயிற்சியினை இலவசமாக பொறுமையாக பெற்றால் மாதாந்தம் ஆக குறைந்தது ஒருவர் இருபது ஆயிரம் ரூபா சம்பளம் பெறலாம். இதைவிட இளைஞர்களுக்கு முயற்சி இருந்தால் சுயதொழிலில் ஈடுபட்டு இதே அளவு வருமானத்தை பெறலாம். எமது ஊரில் பத்து குடும்பத்துக்கு ஒரு ஆட்டோ உண்டு.இடும்பன் கோயில் சந்தியில் எட்டு ஆட்டோக்கள் நிறுத்திவிட்டு இளைஞர்கள் அரட்டை அடித்துகொண்டிருப்பதை இங்குவரும் புலம்பெயர்ந்தவர்கள் காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் ஆட்டோவின் முதலீடு நவீன பாடற்கருவிகள் பொருத்தப்பட்டதால் ஐந்து இலட்சத்துக்கு மேல்.இவர்களின் மாதாந்த வருமானம் ஐயாயிரத்துக்குள். புடவைக்கடைக்கு செல்லும் இளைஞர்கள் இலகுவாக வேலை புரிவதற்கே அங்கு போகிறார்கள். நீங்கள் எவ்வளவுக்கு கடினமாக வேலை செய்து உழைப்பது உங்களுக்கும் என்போன்றவர்களுக்கும் தெரியும். இவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஆனால் வெளிநாட்டு உள்நாட்டு உதவி எதுவும் இன்றி சிறுபிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்கே எந்தவித வருமானம் இன்றி ஆனால் அந்த பிள்ளைகளின் கல்வியை சிறப்பாக அமைப்பதற்கு இங்கு கிட்டத்தட்ட ஒரு பத்து விதவைகள் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள். உங்கள் நீண்ட ரயில்பாதை திட்டங்களை கைவிட்டு ஆய்வு செய்வதைவிட்டு சமூக நோக்கு கொண்ட மன்ற பொடியளுடன் தொடர்பு கொண்டு அந்த குடும்பங்களின் கையில் ஏதாவது கிடைக்க செய்தால் எங்கடை ஊரில உள்ள தெய்வங்கள் உங்களை ஆசீர் வதிக்கும்.
  குறிப்பு மன்ற பொடியளை நான் தெரிவு செய்த‍தற்கு காரணம் ஊரில எல்லாரும் கோயில் கட்டிக்கொண்டிருக்கேக்க எங்கட பொடியள் தான் மழையில நனையாமல் எங்கடை சவங்கள் எரியிறதுக்கு எத்தனையோ எங்கட சமூக அக்கறையுள்ளவர்கள் எதிர்க்க கொட்டகை கட்டினவங்கள். மற்றவை எல்லாம் கோவிலைத்தான் கட்டிக்கொண்டிருக்கினம்.
  பனிப்புலத்தில் இருந்து நடுக்குறிச்சியான்

 • Kobal:

  உண்மை தான் பகி`அண்ணன், மக்கள் வங்கி, மற்றும் பல INGO`க்கள், பல உதவிகளை செய்ய காத்து இருக்கின்றனர் அனால் அவ்வுதவிகளை பெற்றுக்கொடுக்க ஒருவரும், அதை நடைமுறைப்படுத்த ஒருவரும் வேண்டும். 2-3 பயணாளிகளுக்கு ஒரு நல்லதோரு வளிகாட்டி, அவருக்கு பயணாளியின் முன்னேற்றத்தை பொறுத்து ஒரு தொகை சன்மானமாகக் கொடுக்கலாம்.

  • அழ பகீரதன்:

   ஏன் மக்கள் வங்கிக்கும் என் ஜி ஒவுக்கும் போகவேண்டும் என்னைப் பயன் படுத்தலாம் தானே? 50 பேரை 5 பேர் கொண்ட சிறுகுழுக்களாக உருவாக்கி பின்னர் அக்குழுக்களை ஒன்றிணைத்து ஒரு சங்கமாக்கி அந்த சங்கத்தை நாம் இலங்கை வங்கி ஊடாக மத்தியவங்கியில் பதியவேண்டும்.சாந்தை காலையடி காலையடி தெற்கு பணிப்புலம் ஆகிய இடங்களில் இதன் சப் சென்ர‍ர் அதாவது இவற்றை அபிவிருத்தி நிலையம் என்று சொல்லுவோம். இச்செயற்பாடுகளை வேறு கிராமங்களில் செய்துள்ளார்கள். அதுவே தொடர்ந்து இப்பகுதியின் அபிவிருத்தி பற்றி சிந்தித்து பல நடவடிக்கைகளை செய்யும். அச்சங்கம் மறுமலர்ச்சி மன்றத்தை தளமாக கொண்டு இயங்கும். இலங்கை வங்கி அதற்கு பக்க பலமாக இருந்து உதவிகள் செய்யும். இதற்கு நான் முழு ஒத்துழைப்பும் வங்கியூடாக செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

   • அழ பகீரதன்:

    நான் சொல்லுகின்ற 50 பேர் உதாரணத்துக்கு மட்டுமே இந்த ஐம்பது பேரும் ஐம்பது குடும்பங்களின் உறுப்பினராக இருக்கவேண்டும். குறிப்பாக இளம் ஆக்கள். நாற்பது வயதுக்குள் இருப்பது விரும்பத்தக்கது

 • நல்ல விடயங்கள் பரிமாறப்பட்டது. நன்றி பகி. இந்த நிலையை மாற்றி அமைக்க எமது ஊரின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஒரு தொழிற்சாலை உருவாக்க முடியாதா? அந்த தொழிற்சாலையூடாக பல உறவுகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கின்றேன்.

  தேடிக் கொண்டே இரு ஊழியம் கிடைக்கும்
  செய்து கொண்டே இரு ஊதியம் கிடைக்கும்
  ஓடிக் கொண்டே இரு கால் கொஞ்சம் வலிக்கும்
  உலகத்திலே நீ நினைத்தது நடக்கும்.

 • அழ பகீரதன்:

  வடலியடைப்பு கிராம அலுவலகர் பிரிவிலும் எமது ஊர்மக்கள் வசிக்கின்றார்கள். இந்த அனைத்து கிராம அலுவலகர் பிரிவிலுள்ள அனைவரும் மறுமலர்ச்சி மன்றத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள எழுத்து மூலம் விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்பங்களை நிர்வாகம் கூடி ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும். மேலும் இது விவாத‍த்திற்கு அல்லாமல் வெறும் தகவலுக்கு தான்.

 • அழ பகீரதன்:

  பணிப்புலம் கிராம அலுவலகர் பிரிவில் தற்போது 523 குடும்பங்கள் உள்ளன. குடித்தொகை 1150 பேர். 95 பேர் தனித்து உள்ள முதியவர் ஆவர்.இங்கு 4 சமூகத்தவர் (சாதி) வசிக்கின்றனர். மத ரீதியில் இந்துக்களும் கிறீஸ்தவர்களும் உள்ளனர். பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவர். பண்ணாகம் கிராம அலுவலகர் பிரிவில் எமது கிராமத்தவர் 23 குடும்பத்தவர்(உறுதிப்படுத்த முடியவில்லை) வசிக்கின்றார்கள். சில்லாலை மேற்கு பகுதியிலும் எமது கிராமத்தவர் வசிக்கின்றார்கள். ஆனாலும் பணிப்புலம் கிராம அலுவலகர் பிரிவிலேயே எமது கிராமத்தவர் அதிகம் செறிந்துள்ளனர்.

 • பகீரதன் எமது ஊரின் பொருளாதார நிலமை பற்றி சிறப்பாக
  விளக்கி உள்ளீர்கள். கருத்துகூறியவர்களின் கருத்துகளையும்
  கருத்தில் எடுத்து சிந்தித்து செயற்படுவோம்.

 • Selvarajah.k:

  அம்பாள் துணை நிற்க;
  அருமையான தகவல் தந்த நண்பர் பகிக்கு நன்றிகள்.
  இங்கு குறிப்பட்டதை விட,வயலில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்களின் நிலைகள் என்ன மாதிரி. அதைவிட எங்களூரில் வேலை செய்யத்தெரியாதவர்களின் நிலை என்ன?இப்பொளுதும் கூப்பன் அரிசி சாமான்கள் கிடைக்கின்றதா?

  இது உண்மையில் நான் கண்ட உண்மை.
  நான் சவுதியில் இருந்தபோது, காத்தான்குடி வாழும் நண்பர்கள் மாதமொரு முறை ஓரிடத்தில் கூடுவார்கள்.இவர்கள் கூடிப் பொளுது போக்குகறார்கள், அரட்டை அடிக்கிறார்கள், சீட்டு விளையாடுகிறாகள் என எண்ணினேன். ஒரு தடவை நானும் போனேன் சீட்டு விளையாடும் ஆர்வத்தில். எனக்க்கு அங்கு உள்ள அனைவரும் என்னைச் செ…..ஆல் அறைந்த்து போன்று இருந்தது அங்கு நடந்தவை. அவர்களில் பலர் எங்களை விட வசதியில் குறைந்தவர்கள். ஒருவர் சொன்னார் தங்கள் வீட்டில் கருவட்டை துணியில் கட்டி மரக்கறிச்சட்டிக்குள் இறக்கி இறக்கி ஒருவரத்த்துக்குமேல் மணந்து மணந்து உணவுடன் உண்பார்களாம். அப்படிப்பட்ட வறுமுயுடன் வாழ்பவர்கள்தான் அந்தக் கூட்டத்தில் அதிகமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் செய்த தொண்டு என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
  அவர்களின் இனப்பற்று ஊர் உறவுகளின்மேல் வைத்த அன்பு வருமா எனக்கும் எமது உறவுகளுக்கும்?
  ஊரில் இவர்களே வறுமையி வாடுபவர்கள், இவர்கள் தங்களது ஊரில் வயது வந்த கலியாணமாகாத பெண்களுக்குக் கலியாணம் செய்து வைக்கவும், அதிக குழந்தைகளுடன் அவதிப்படுவோருக்கு உதவவும் வேலையில்லாதோருக்கு தொழில் வாய்ப்புக்கு உதவவும், அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்களது ஒருநாள் கூலியை, ஒரு சங்கம் அமைத்துச் சேர்த்துப் பணிசெய்து கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பத்து றியால் கூலி. சிலக்கு முப்பது அமெரிக் டொலர் கூலி.எல்லோரும் மனமுவந்து மனம் கோணாமல் கேள்வி கேட்காமல் வாரிவாரிக் கொடுத்தன்.
  வருமா எனக்கும் எமக்கும் இந்த மனம்.
  நாங்கள் கோவிலுக்கும் கோபுரத்துக்கும் மட்டும் தான் கொடுப்போம்.
  மனதுகளைப் புண்படுத்தினால் மன்னிக்கவும்.
  நன்றியுடன் இராசன்.

 • அழ பகீரதன்:

  ரூபா 15000 வருமானமாக பெறும் குடும்பங்கள் வறுமையாளர்களாக கணிக்கப்படுகின்றார்கள்.இவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக வறுமை ஒழிப்பு கடன் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். குறிப்பாக யுத்த முடிவுக்கு பின் வடக்கு கிழக்கில் இதனை மத்தியவங்கி வங்கிகள் ஊடாக நடைமுறைப்படுத்துகின்றார்கள். அதனைவிட அரசு சாரா நிறுவனங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக கடன் வழங்குகிறார்கள் இது சுழற்சி முறைக்கடன்களாக இருக்கின்றன. ஆக வறுமைக்குள் இருக்கும் குடும்பங்களுக்கு உலக உணவுதிட்டத்தின் கீழ் இலகு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிவாரணம் பொருட்களாக வழங்கப்படுகின்றன. அதனை விடவும் சுயதொழிலுக்கான உதவு தொகைகளும் சில அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மிக அண்மைக்காலத்தில் சுவீஸில் ஒரு ஆலயம் வறுமையான மாணவர்களுக்கு உதவு தொகை வழங்க கணக்கு திறக்க சொன்னதாக ஒரு பெற்றோர் எனக்கு சொன்னார். சன்னதியான் மடம் இவ்வாறான சிறு உதவிகளை செய்வதை என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது. துர்க்கை அம்மன் கோயிலின் பணிகள் முன்னுதாரணம் மிக்கவை. அண்மையில் கெயர் எனும் நிறுவனம் காலையடி(பன்னமூலை) கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு ரூபா 70000 வழங்கியுள்ளது.இச்சங்கம் பண்ணாகம் கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்டது. இச்சங்கம் அப்பணத்தில் அம்மக்களுக்கு கடனாக வழங்குகின்றார்கள். சுழிபுரம் தொல்புரம் மூளாய் போன்ற இடங்களில் மக்கள் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி பயன் அடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.இன்றைய தினம் நான் மூளாய் அ.மி.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டேன். அந்த பாடசாலையில் படிப்பவர்களையும் அவர்களது பெற்றோரையும் அவதானித்த போது அவர்களும் எனது கண்ணுக்கு வறுமையாளராகவே தென்பட்டார்கள்.ஆனாலும் பிள்ளைகளின் சீருடைகள் பளிச்சென்று சிறப்பாக இருக்கின்றது. அந்த பிள்ளைகளின் உடல் உள ஆற்றலில் மனம் பறிகொடுத்து இருந்துவிட்டேன். நான் அந்த பாடசாலையில் நோட்டமிட்ட போது அங்கே கண‍னிப் பிரிவு இருப்பதை கண்ணுற்றேன். ஆனால் காலையடி அ மி த க பாடசாலையில் கணனிப்பிரிவு இல்லை. இந்த எண்ணம் எனது மனதில் ஓடியது. காலையடி அ மி த க பாடசாலை பற்றி நான் பின்னொரு சமயம் எழுதுகின்றேன்.

 • Kobal:

  இது தான் எங்கள் ஊரின் உண்மை நிலவரம். இதை துணிச்சலாகவும் நேர்மையாகவும் சொன்ன பகி அண்ணணுக்கு நன்றி. எனி இதில்லிருந்து மிகுதியை நாங்கள் கணக்குப்பாற்போம்.
  எங்கள் ஊரில் மொத்தம் 10000 பேர் எண்று வைப்போம்
  அதில் 20 ஆசிரியர்? மொத்தமாக ~1000 பேர் 25000 க்கு சம்பாதிப்பவரக வைத்தால்=10%?
  வெளிநாட்டில் உறவு உள்ளோர் ஒரு 10%? மிகுதி 80% ஆனவர்கள் வறுமைக் கோட்டுக்குகிள் உள்ளோர்? இவர்களுக்கு எற்றமாதிரி ஒரு திட்டம் உங்களை போன்ற சமுக நோக்கம் உள்ளவர்களால் உருவாக்கி முன்வைத்து அலசி நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதா?

  • அழ பகீரதன்:

   நோர்வேயை சேர்ந்த சிலர் சிலவருடங்களுக்கு முன் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அதுவும் விதவைகளுக்கு உதவுவதற்கான முன்முயற்சி பற்றி உரையாடினார்கள். நான் இதுபற்றியவிடயங்களை அவருக்கு அனுப்பியிருந்தும் அவர் என்னுடன் அதற்கான முயற்சியில் பின்னர் ஒத்துழைக்கவுமில்லை. தொடர்பு கொள்ளவுமில்லை. இதனால் நான் அந்த முயற்சியை கைவிடவேண்டி வந்துவிட்டது. நான் பின்னர் அற

   • அழ பகீரதன்:

    பின்னர் அறிந்தேன் அவரது அந்த முயற்சிக்கு அந்த நாட்டிலுள்ள எமது ஊரவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   >>>வெளிநாட்டில் உறவு உள்ளோர் ஒரு 10%?<<<
   என்னை பொறுத்த வரையில் 70 % இற்கு மேலானவர்களுக்கு வெளிநாட்டு உறவு உள்ளது – எனது கணிப்பீடு பிழையாக அமையலாம். என் புள்ளி சரியாக இருந்தால்: 20 % / 2,000 மக்கள் குறிப்பிட்டது மாதிரி ஒரு நாளிற்கு அத்தியாவசிய தேவை செலவான Rs1 ,000 ஐ நாடுபவரை உதவுவற்கு புலன்பெயர்ந்த நாடு ஒன்றில் ஒருவர் மாதத்திற்கு உதவ வேண்டிய குறைந்த தொகை Rs.30,000 = EUR210/U$290/CA$290/AU$290/GBP180/DKK1,600 . இத்தொகை புலன்பெயர் நாட்டில் தனிய வசிப்பவர் மாதாந்தம் தன் சாப்பாட்டை கவனிப்பதற்கு சமமான தொகையாக அமைகிறது. உங்களுடைய கேள்விக்கான பதில் சாத்தியமாகாது என்பது என்கருத்து. ஒரு ஊர் குடும்பத்தை ஒரு புலன்பெயர் குடும்பம் தத்து எடுப்பதும் சாத்தியம் ஆகாது. இதன்பொருட்டு தான் Norway உள்ளவர் பகி அண்ணையிடம் தகவலை திரட்டி ஆராய்ந்த பின் அந்த திட்டத்தை கைவிட்டாரோ என்னமோ? நான் அறியேன். சின்னன் சின்னனாக தொடக்கி திட்டங்களை பெரிதாக்குவது தான் என்னை பொறுத்தவரையில் நடைமுறை சாத்தியம். வேற ஏதாவது யோசனை?

   • அழ பகீரதன்:

    நான் தனி நபர்களை த‍த்தெடுக்குமாறு கூறவில்லை. குடும்ப மொன்றுக்கு மாடு வளப்பதற்கு 170000ரூபா மூலதனம் வேண்டும் என்றால் இருபது குடும்பத்திற்கு 3400000 தேவை இதில் இருபது பேருக்கும் 1800000 ரூபா வங்கி கடனாக வழங்கும் மீதி 1700000 ரூபா வெளிநாட்டவர்கள் மன்றத்தினூடாக வழங்குவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக மன்றம் அனுசரணையாளராக வங்கிக்கும் பயனாளிகளிற்கும் மன்றத்தின் நன்கொடையாளர்களான வெளிநாட்டில் வதியும் ஊர் பிரதிநிதிகளிற்கிடையிலும் இருக்கும். மன்றத்தினால் நியமிக்கப்படும் ஊழியர் திட்டத்தை கண்காணிப்பதுடன் கணக்கு வழக்குகளை பேணுவதோடு குடும்பங்களின் கணக்கு வழக்குகளையும் பேண உதவி செய்வார். இதற்கு தான் வெளிநாட்டவர்கள் உதவ முடியும்.

 • t.bala:

  பகி அவர்கட்க்கு நன்றி.ஆக்கபூர்வமான தகவல் இருந்தாலும் தறப்போதைய அடிப்படை ஊதியம் ஓவ்வொரு தொழில்களுக்கு என விபரம் ஒன்றையும் எழுதினால் பலர் அறியலாம். பாலா

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நன்றி, பகி அண்ணை. இந்த அடிப்படை தகவலை தான் நான்/ம் ஆராய்ந்து கொண்டும் ஆய்வு செய்து கொண்டும் இருந்தேன்(/தோம்). இவை இனி உருவெடுக்க இருக்கும் நெதர்லாந்து ஊரவர் ஒன்றியத்திற்கு முக்கிய அடிப்படை தகவலாக அமைகிறது. உங்களுக்கு ஒரு பெரிய நன்றி – panipulam .net இற்கு அதைவிட பெரிய நன்றி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்