Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்6 Responses to “”

 • சி.சிவானந்தம்:

  மனமாரப் பிரார்த்திக்கும் தனது அடியார்களை இறைவன் கைவிடமாட்டார் என்பதற்கு உதாரணமே இந்நிகழ்வானது நீதிமன்றத்தால் உடனடியாகவே தடுத்து நிறுத்தப்பட்டமையாகும்.ஆலயங்களில் உயிர்ப்பலியிடுவதை இறைவன் ஏற்கமாட்டார் என்பதற்கும்,கடவுள் இல்லையென்று வாதாடுபவர்களுக்கும், இந்நிகழ்வே போதுமானதாகும்.

  *கடவுளை நம்பினோர் கைவிடப்படார்*

 • சி.சிவானந்தம்:

  தம்பி வடிவேலனே!

  மிருகபலி நடாத்துவது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆகம விதிகளுக்கு மாறாக, ஒரு பழமையான ஆலயத்தை புனருத்தாரணம் செய்பவர்கள் அந்த ஆலயத்தின் வரலாற்றை முதற்கண் அறிந்து தகுதி வாய்ந்த வேதாகம விற்பன்னர்களுடன் ஆலோசித்த பின்னரே கிரியை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி இவ்வாலயம் புனருத்தாரணம் செய்யப்படாத பட்சத்தில் செயற்பாட்டாளர்கள் பாடுபட்டதற்கான பலனைப் பெறாது பாவத்தையே சுமக்க வேண்டியவர்களாவர் என ஆகம நூல்கள் கூறுகின்றன. இங்கு ஐயனார்,காளி அம்மன் ஆகிய ஆவேஷமிகு தெய்வங்களின் கிரியைகளில் அவதானத்துடனும், மிகுந்த பய பக்தியுடனும், முறைப்படி கிரியைகள் ஆற்றப்படவேண்டியது அவசியமாகும்.

  இந்த ஆலயத்தை புனரமைத்த பெரியவர்கள் மிருக பலியிடுவதை நிறுத்தி, பொங்கல் விழாவாக மாற்றி தூய்மையான சைவ வேதாகம நெறிமுறைகளுக்கமைய கிரியைகளை நடாத்துவது மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்.இறையருளையும் இலகுவாகப் பெற்றிட வழிவகுக்கும்.

  அருகருகே புனித ஆலயங்கள் பல சூழ்ந்திருக்கும் எமது ஊரில் மிருகபலியிடுவது, அதுவும் காளி அம்மனுடன் விளையாட முனைவது நினைக்கவே பயமாக இருக்கிறது.

  தயவு செய்து இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயலாற்றுவது சாலச் சிந்ததாகும்.

  *ஓம் காளிகாஜை ஸவித்மஹே
  ஸ்மஸான வாஸின்ஜை தீமஹீ
  தந்நோ ஹோரா ப்ரஸோதஜாத்*

  மனித உயிர் வேறு! மிருக உயிர்கள் வேறல்ல! எல்லா உயிரும் இறைவனின் சொந்தம்!
  மனிதருக்குள்ள உணர்வுகள்,அன்பு,கருணை,பாசம், வலிகள், முதலியன மற்றய உயிர்களுக்கும் சமமானதென்பதை அனைவரும் அறிவர்.

  நன்றி!

  • kunathilagam santhai:

   இந்த ஆலையம் முன்பு அமைக்கப் பட்டதே கிடாய் வெட்டத்தான் .சுழிபுரம் பத்திரகாளி கோயில் மிருகபலி நிறுத்தப் பட்ட போது அதிருப்தியாளரான சுழிபுரம் காடுவெட்டி சண்முகம் தனது காட்டுக் காணியில் அன்று ஒரு சூலம் வைத்து தன்னுடைய கிடாயை வருடாவருடம் வெட்டிவந்தார் பின்னர் அவர் குடும்பத்துடன் புலம் பெயரவே இந்த இடம் மீண்டும் காடானது .இப்போ எம் ஊர்ப் பக்தர்கள் சிலர் இதைப் புதுப்பித்து மீண்டும் அரக்க வழிபாட்டை ஆரம்பித்தனர் .இன்னும் இக் கோயிலைப் புனரமைத்து ஒரு பெரிய அரக்கக் கோயிலாக்க முனைந்துள்ளனர் .ஆனால் சட்டம் குறுக்கே வந்து இவர்களைச் சிந்திக்க வைத்து விட்டது .இதுவே இவ் ஆலைய வரலாறு .

 • vadivelan:

  அண்ணா ,பழைய ஆளையன்களைப் புதுப்பிப்பதை வரவேற்கும் நீங்கள் இந்த ஆலையத்தில் சனிக்கிழமை நடக்கப் போகும் மிருகத்தனமான மிருக பலியையும் வரவேற்ப்பீர்களா ?

 • சி.சிவானந்தம்:

  பழமைக்கககால ஆலயங்களை, தற்கால நிலைதனை மட்டும் கவனத்திற்கொண்டு புனரமைத்து வரும் இறை பக்தி மிகு ஊர்ப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி கலந்த வணக்கமும், வாழ்த்துக்களும்!

  தங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வரிய புனிதப்பணியினால் புத்துயிர் பெறும் ஆலயங்கள் தொடர்ந்து காலங்காலமாக இடையூறுகள் எதுவுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.அதற்கான நிரந்தரமான,சக்திமிகு பணிகளையும் தாங்கள் அமைப்பது அவசியமாகும். ஏனெனில், தற்கால மக்களிடம் பெருகி வரும் நாகரீக மோகமும்,பண பக்தியும்,மருவி வரும் இறை பக்தியும் எதிர்காலச் சந்ததியினரிடம் எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்று கூற முடியாமையாகும்.

  வாழ்க வளமுடன்! வளர்க தங்கள் நற்பணி!

  நன்றி!

  • vadivelan:

   அண்ணன் சிவானந்தன் அவர்கட்கு ,உங்கள் கருத்தை வரவேற்கிறேன் .பழமையான அழிந்து போகும் ஆலையங்களை புதுப்பிப்பது வரவேற்க்கக் கூடியதுதான் .ஆனால் நாகரீகமற்ற ஆலைய வாயிலில் மிருக பலியிடுதலையும் வரவேற்ப்பீர்களா ?இந்த ஆலையத்தில் 2.4.2016 சனிக்கிழமை மிருகத்தனமான ஆடு பலியிடும் வைபவம் நடக்கப் போவதை நீங்கள் அறியவில்லையா ?பழைய மூட நம்பிக்கையினையும் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறுகிறீர்களா ?

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்