உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்201604011934496253_Jaym-Ravi-next-film-new-genre_SECVPFஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிருதன்’ படம் ஜோம்பி வகையில் ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமாக படமாக்கப்பட்டது. இப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சியாக எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ‘மிருதன்’ பட இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, ஜோம்பி வகையிலான வித்தியாசமான கதையை கையிலெடுத்த படக்குழு, இந்த முறையும் வித்தியாசமான கதையை எடுக்கவிருக்கிறார்களாம்.

அதன்படி, இவர்கள் இணையும் புதிய படத்தை வான்வெளி சம்பந்தப்பட்ட கதையாக உருவாக்கவிருக்கிறார்களாம். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என்றும், தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்