உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Unavngivetமன்னார்- தாராபுரம் பிரதான வீதி 4 ஆம் கட்டை பகுதியில் புகையிரதத்துடன் மோதி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் இன்று(4) திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி இன்று திங்கட்கிழமை அதிகாலை பயணித்த புகையிரதத்துடன் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்தள்ளார்.

மன்னார் பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியதாக மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையிலே இன்று அதிகாலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்