உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கில் இடம் பெயர்ந்தவர்களுக்கான 65 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இந்த பொருத்து வீடுகளை தவிர்த்து புதிய கேள்விப் பத்திரங்களுக்கான கோரல் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாரிய வீடமைப்பு திட்டத்தை இரண்டு வருடங்களுக்குள் நிர்மாணித்து முடிக்க உள்ளூரில் நிறுவனங்கள் இல்லை.இதனால்தான் இந்த திட்டம் பிரான்ஸின் ஏசெலர் மிட்டால் நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.வடக்கில் பொருத்து வீடுகளுக்கு மக்கள் எதிரிப்பு தெரிவிக்கும் இந் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சரின் கருத்து மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்