உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Unavngivetமியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. கொல்கத்தா, ஷில்லாங், பாட்னா, கவுகாத்தி ஆகிய நகரங்களில் வீடுகள் குலுங்கியதால், மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஆசியாவில் ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், இந்தியா, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பீதி ஏற்பட்ட நிலையில் ஒரு சில நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்