உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivet

7 Responses to “”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:

  சாந்தை மண்
  கலை கொண்டு சிறந்திலங்க
  சின்னத்துரை தம்பதியினருக்கு
  மகனாக பிறந்தார் ஜெயராசா
  இன்று பொன் விழா காணும் மைந்தன்
  பள்ளிப் பருவத்தில்
  பல மேடை கண்ட இவர்
  பல வெற்றிகளையும் கண்டார்

  படித்தபாடசாலைக்கு
  கனணியும் கொடுத்து
  வருடம் ஒரு முறை வரும்
  விளையாட்டுப்போட்டியையும்
  திறம்பட செயல்படுத்தி
  மனம் நெகிழ்கிறார்

  இறைவன் கொடுத்த
  இசையால்
  ஊர்க் கோயில் மட்டுமன்றி
  பல கோயில்களுக்காக
  ஆன்மீகப் பாடல்கள் பாடி
  தன் இசையாற்றலை வளர்த்து
  இசைவேந்தன் என்ற
  பட்டத்தை வென்றார்

  சாந்தை சித்தி விநாயகர்
  ஆலயத்தை முன் நின்றே புனரமைத்து
  நேர் நிற்க வழி கண்டே
  நித்தலமாய் திகழ்கின்றார்

  தீராத சுமையில் நின்றும்
  திக்கற்றோர் வாழவேண்டி
  திரை கடல் ஓடியும்
  திரவியம் தேடி இங்கே
  தினம் தினம் கொடைவழங்கும்
  நல் மனம் கொண்ட ஜெயரசாவை
  எல்லாம் வளமும் பெற்று வாழ
  இந்த பொன் விழாவில்
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் (நோர்வே)
  வாழ்த்துகின்றது .

  இங்ஙனம்
  வாழ்த்துவோர்
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் (நோர்வே அங்கத்தவர்கள்)

 • பனிப்புலத்தாய். ஈண்றெடுத்த பாடகனே..!
  ஆனந்தமாய் பாடும் .பாவலனே.! உன்னை
  பெற்றதில் பெருமை கொள்ளுதையா. பனிப்புலம்.

  பிறந்த மண்ணின் புகழை.தெய்வீக
  கீதங்களால் தாலாட்டுப் பாடியவனே. !
  கடவுளை. பற்றிய, காவியத்தை எங்கள்
  காதுகளில்.ஏற்றியவனே.! ஈர்த்தவனே!
  காட்டியவனே! ஊட்டியவனே.!உரைத்தவனே.!

  தேன் போன்ற உன் தமிழ் உச்சரிப்பை.
  கேட்ட அந்த நிமிடங்களில். என்னை
  நானே மறைந்து போனேனையா.

  இறைவனின். அருளை. மழலை போல
  பொழியும் உன் குரலை.என் காதுகள்.
  கேட்டுக்கொண்டிருக்கவில்லையையா.
  பிழிந்து குடித்துக்கொண்டிருக்கின்றன.

  மங்கலமாய் வந்தவனே!
  புகழ்ந்து பாடிய உம்மை.
  புகழ்ந்து வாழ்த்துகிறேன்.
  புகழ்பெற வாழ்த்துகிறேன்

 • OSA ARUMUKA VID chulipuram:

  எமது பாடசாலையின் பற்றுமிகு பழைய மாணவனாகிய

  திரு.சின்னத்துரை ஜெயராசா அவர்களின் பிறந்த தினத்தில்
  பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

 • சி.சிவானந்தம்:

  பண்ணூரின் இறை பண்பாடும் பழமையை பேணிக் காத்திடும்
  பண்பாளனே!
  இறையவன் வழங்கியய புலம்பெயர் வாழ்வினை
  இறை புகழ் பாடவும், இறையுறை திருப்பணிகளிற்காக தியாகம் செய்த இறையவன் புத்திரனே!
  உல்லாச வாழ்வு உனக்கிருந்தாலும் பிறந்த மண்ணிண் வளர்ச்சிக்காக உழைத்திடும் உத்தமனே!
  புலம் வாழ் வறியோர் வறுமைதனை விரட்டிட, ஏழை மாணாக்கர் கல்வி வளர்ந்திட வாரி வாரி வழங்கும் வள்ளலே!
  உன்னைப்போல் ஓர் உத்தமனை எமதூர் பெற்றதன் பெருமை உன் மூதாதையர் ஆற்றிய இறை பணியின் பலாபலனே!
  உனதாயுள் பஞ்ச தசாப்தமானாலும் இன்னும் பல தசாப்தங்கள் நீ வாழ்வாங்கு வாழ்ந்து
  மக்கள் பணியாற்றி வாழ்ந்திட எல்லாம் வல்ல எம்பிராட்டி துணை நிற்க வேண்டிப் பிரார்த்தித்து பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வாழ்க! என வாழ்த்துகின்றோம்.

  வாழ்க வளமுடன்!

  சிவானந்தம் குடும்பம்.

 • த.தனகோபால்:

  வருடங்கள் வருவதிலும்
  போவதிலும் என்னபயன்?
  செய்யும் செயல்களால்த்தான்
  செயல்களுக்கும் பயன்.
  இன்னுமோர் ஆண்டு
  இனிதாய் மலர்ந்திருக்கு
  புதிதாய் பெரிதாய்
  நிறைவாய் உயர்வாய்
  வாழ வாழ்த்துகிறேன்…!

 • Ratnarajah family:

  அகவை ஐம்பதில் அடிஎடுத்து வைக்கும்
  இசைவேந்தனுக்கு இன்று அகவை
  ஐம்பதா? வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்
  வளர்பிறைபோல் வளரட்டும் !வளரட்டும்
  உங்கள் இசைப்பணியும் தொடர் ,சமூகப்பணியும்
  தொய்வின்றி தொடரட்டும் ! தொடரட்டும்

 • kunathilagam santhai:

  என் மண்ணாம்
  பொன் மண்ணில் பிறந்து
  அன்பினால் அனைவரையும் வென்று
  பண்பினால் பலரும் போற்ற
  சின்னாளிலேயே சிறப்பாகப் பாடி
  பின்னாளில் பக்தி இசை பொழிந்து
  இன்னிசை வேந்தனான
  முன்னாள் செயப்போடியே ஜெயராஜனே
  உன்னால் எம் சாந்தை
  குன்றாத புகழ் பெற்றதென
  சொன்னால் அது எம் பெருமை ,
  மன்னா அகவை ஐம்பதில் உன்
  புன் சிரிப்புடன் இன்னும்
  பண்ணுடன் பக்தி இசை பாட
  எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை
  ஏத்தி வேண்டியின்னும்
  பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்
  வாழ்க பல்லாண்டு !

  அன்புடன்
  அயல்வீட்டுக் குணம் .

  ஆ .த .குணத்திலகம்
  சாந்தை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்