உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன. தமிழ்ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம்(American Tamil Forum) ஆகிய இரு அமைப்புக்களுமே இவ்வாறு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. போர் குற்றச்சாட்டுக்களின் முக்கிய நபராக கருதப்படும் ஒருவரை கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பை அமெரிக்கா தவறவிடக்கூடாது எனவும், அவ்வாறு தவறவிடப்படுமானால் ஏனைய போர் குற்றவாளிகளை அது ஊக்குவிப்பதாக அமையும் எனவும் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்