உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடன் செலுத்துகைகளுக்காக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.2020ம் ஆண்டளவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 3.5 வீதமாக வரையறுக்க முடியும் என இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளது.
வரி அறவீட்டு முறைமைகளின் ஊடாக வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.நிபந்தனைகளின் அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினர் கடன் வழங்குது தொடர்பிலான அனுமதியை வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் மேலும் 650 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, மொத்தமாக 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்