உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நாட்டின் 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் மழை, வெள்ளம் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த நிலையம் தெரிவிக்கின்ற போதும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 176 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 123 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் 12 ஆயிரத்து 151 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 5 ஆயிரத்து 74 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 603 பேர் 63 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் 11 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் 2 ஆயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 940 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 32 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 8 ஆயிரத்து 23 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக 50 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. இம்மாவட்டத்தில் 697 வீடுகள் முற்றாகவும், 3 ஆயிரத்து 224 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் வெள்ளத்தால் 3 ஆயிரத்து 259 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 55 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெயர்ந்த 3 ஆயிரத்து 193 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 51 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் 2 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 808 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 11 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 23 வீடுகள் முற்றாகவும், 240 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்