உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


eu_CIஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான சரியான வழியில் இலங்கை பயணித்து கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத்தூதுவர் டேவிட்டெலி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் 58 விடயங்கள் தொடர்பில் ஐரொப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் மனித உரிமை விடயங்களே பிரதானமானவையாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது எந்த நாட்டுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்காக அழுத்தம் கொடுக்காது.

எனினும் ஜிஎஸ்பி பிளஸ் என்பது ஒருநாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துதலை வழங்கக்கூடியது. எனினும் அது ஒருநாட்டின் மனித உரிமை காப்புக்கான பரிசு அல்ல என்று டேவிட் டெலி குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் இலங்கையில் மனிதஉரிமை விடயங்களில் முன்னேற்றம் தென்படுகிறது. இன்னும் முன்னேற்றங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கினாலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பில் ஈடுபடும் என்று டெலி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் 2016ஆம் 17ஆம் ஆண்டுகளுக்காக சிவில் சமூக வலுப்படுத்தலுக்காக 700 மில்லியன் ரூபாய்களையும், சிவில் சமூக அமைப்புக்களுக்கும் உள்ளுர் அதிகாரிகளுக்கும் ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட எண்ணியுள்ளதாக டெலி தெரிவித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்