Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஜக்கியநாடுகள் சபையின் 32 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்றை ஜ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ரா அத் அல் ஹூசைன் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.எதிர்வரும் 13 ஆம் திகதி ஜ.நா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், கூட்டத் தொடருக்கான கால அட்டவணை மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 29 ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்றை ஆணையாளர்  சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் படிவத்தை  தீர்மானிப்பதற்கான நேருக்கு நேர் கலந்துரையாடல்கள் ஜூன் மாத நடுப்பகுதில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ள விசாரணைப் பொறிமுறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள  வேலைத்திட்டங்கள் குறித்து ஸ்ரீலங்கா சார்பாக அறிக்கை ஒன்று முன்வைக்கப்படும்  என எதிரிபார்க்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா சார்பாக கலந்துகொள்ளவுள்ள உயர்மட்ட பிரதிநிதிகள் உறுப்பு நாடுகளின்  பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா அமர்வில்  கலந்துகொண்டு உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்