உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Accha-Mindri-Movie-Stills-3என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்குபிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

நாயகன் விஜய் வசந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.

கவுரவ வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.ஒளிப்பதிவு–ஏ.வெங்கடேஷ், இசை–பிரேம்ஜி, எடிட்டிங் –பிரவீன் பாடல்கள்– யுகபாரதி, வசனம் –ராதா கிருஷ்ணன்,ஸ்டண்ட்  கணேஷ்குமார்நடனம் –விஜிசதீஷ், தயாரிப்பு–வி.வினோத்குமார், கதை, திரைக்கதை,இயக்கம்– பி.ராஜபாண்டி படம் பற்றி இயக்குனர் பி.ராஜபாண்டியிடம் கேட்ட போது.

இது கமர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது? சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை படமாக எடுத்திருக்கிறோம்” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்