உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்201605151749482674_Sundar-C-muthina-kathirika-this-month-release_SECVPFஅவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. நாயகன் சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, சுமித்ரா, கிரண், ரவிமரியா, ஸ்ரீமன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு– பானுமுருகன், இசை–சித்தார்த் விபின், படத்தொகுப்பு–ஸ்ரீகாந்த் என்.பி., ஸ்டண்ட்– தளபதி தினேஷ். இயக்கம்– வெங்கட்ராகவன்.
சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். படம் பற்றி கூறிய அவர்.‘‘தற்போது எல்லா கோணங்களிலும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வெளிவராத ஒரு கோணத்தில் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் ஆன “வெள்ளிமூங்கா” படத்தின் ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து, ஒரு படமாக எடுத்திருக்கிறோம்.

40 வயதான அரசியல் வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கிறார், ஒரு பெண் மூலமாக அவரது சொந்த வாழ்க்கை எந்த நிலைக்கு போகிறது என்பது கதை.கதாநாயகனுடன் இணைந்து செல்லும் நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.டும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது’’ என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்