உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மறுமலர்ச்சி மன்ற வாசிகசாலையில் ஆவலுடன் பத்திரிகை வாசிக்கும் வாசகர் இவர் யார்

10 Responses to “மறுமலர்ச்சி மன்ற வாசிகசாலையில்”

 • அழ பகீரதன்:

  சுமார் ஓராண்டுக்கு முன் வன்னியிலிருந்து மீளக்குடியேறுவதற்காக யாழ்ப்பாணம் நோக்கி மக்கள் வந்த காலகட்டம். அப்போது அந்த மக்களுக்கு மீளக்குடியேறுவதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக கணக்கு திறப்பதற்காக சுழிபுரம் மத்தியிலுள்ள ஒரு கிராம அலுவலகர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அவ்வாறு அந்த அலுவலகத்தில் எனது கடமையின் நிமித்தம் இருந்தபோது வெளியே கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் இந்த நபரை சந்தித்தேன். அவ்வாறான சூழலில் இவரை அங்கு நான் சந்திப்பேன் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்பதை தவிர எனக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. ஓ அவர் எவ்வளவு கொடுமைகளைச் சந்தித்திருப்பார்… அது ஒரு பெரிய கதையாக இருக்கும். குணம் கண்ணம்மா தம்பதியினரின் மூத்த மகன் தான் இவர் பெயர் குணசேகரன். ஏறக்குறைய எனது வயதினர். நான் சிறுவயதில் மன்றத்தில் நடித்த நாளைய உலகம் எனும் நாடகத்தில் அவரும் நடித்திருக்கலாம்.தனது வழிகாட்டியாக மறுமலர்ச்சி மன்றத்தை நினைவு கூரும் இவர் இன்றும் அந்த கலகலப்புக்காக ஏங்குபவர்.கவிதையை நேசிக்கும் இவர் ஒரு கவிஞர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 • ,rama:

  நான் தலைக்கு டை அடித்தால் தான் சொன்னேன் நான் அவர் இல்லை என்று, குத்துச்சண்டைக்கு தலமைதங்கிய கெங்கா கன்டுபிடித்துவிட்டர்,

 • விசு.க.விமலன்.:

  சீ…சீ..இவர் வெளிநாட்டிலிருந்து போகேல்லை-ஏனென்றால் இவர் தலைக்கு டை அடிக்கவில்லை!

 • இவர் தான் உலகப் புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் குணம் கண்ணம்மாவின் பேரன்.

  • அழ பகீரதன்:

   ஏன் தம்பி குத்துச்சண்டை வீர‍ர்களை பற்றி எழுதினால் தான் பணிப்புலம் இணையத்தில் பாப்பியளோ? உங்களுக்கெல்லாம் பணம் கூடிப்போச்சு போல கிடக்கு

   • நலன் விரும்பி:

    நான் இவர் அருகில் இருந்து பேப்பர் பார்த்த காலம் ஒன்று இருந்தது. அவர் அன்று இருந்த தோற்றத்தை விட இன்று நிறையவே மாறி விட்டார். அதனால்தான் என்னவோ எங்கள் அனைவருக்கும் இவரை கண்டு பிடிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கின்றது.

 • அழ பகீரதன்:

  இந்த நபர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லையெனில் உங்கள் யாருக்கும் ஊர் பற்றியதெரிதல் இல்லை என்று தான் சொல்லவேண்டும். குணம் கண்ணம்மா என்று ஒரு சந்தோசமான குடும்பம் ஊரில் நீங்கள் இளந்தாரிகளாக அல்லது சிறுவர்களாக இருந்தபோது வாழ்ந்துவந்தார்களே அதுவாவது உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா?

 • நலன் விரும்பி:

  சாயல்லா அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவின் தம்பி மாதிரி இருக்கிறது. ஆனால் அவரோடு நான் இன்று கதைத்தனான். அவர் அமெரிக்காவில்தான் இருக்கிறார். ஆகவே இவர் அவர் இல்லை. நான் நினைக்கிறேன். வெளிநாட்டில் இருந்து ஊர் சென்ற ஒருவாராகத்தான் இருக்கும். வயது ஒரு 60க்கு மேல்ல இருக்கும் போல………….

 • ,rama:

  நான் அவர் இல்லை, சிலநேரங்களில் கெங்காவுக்கு தெரியவய்ப்புக்கள் இருக்கிறது,

 • விசு.க.விமலன்.:

  யாரோ ஒரு இடம்பெயர்ந்து தற்போது ஊரில் வசிக்கும் நபராக இருக்கலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்