உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 400 ஏக்கர் காணிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அரச அதிகாரியை மேற்கோள் காட்டி இந்த தகவலை தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 200 ஏக்கர் காணி தெல்லிப்பளை பிரதேசத்திலிருந்து விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் வடக்கில் 2 ஆயிரத்து 175 ஏக்கர் காணிகளும் கிழக்கில் ஆயிரத்து 55 ஏக்கர் காணிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் காங்கேசன் துறையில் 65 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மோதலினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான தேசிய கொள்கையின் இறுதி வரைபு அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சினால் தயாரிக்கப்பட்டது.

அதில் இராணுவத்தினரால் சுவிகரிக்கப்பட்டுள்ள காணிகள் உரிமையாளர்களிடம் அல்லது காணிகளில் முன்னர் வாழ்ந்தவர்களிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்