Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



kamarun_vகுடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்க்குலைத்து அதனை அடைய முயற்சிப்பதானது முட்டாள்தனமான செயலாகும் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளாரஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து நீடிக்குமா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், அது குறித்த தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவை சிறப்பு அந்தஸ்தின் கீழ் நீடிக்க செய்வதாகக் குறிப்பிட்ட கமரூன், ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான பிரசாரத்தை தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பது குறித்த பிரசாரங்களை கமரூன் தலைமைத் தாங்கி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்