உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesG37R6QHPஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரிவிணைவாதத்திற்கு தீர்வு வழங்க முடியும் என நாம் நீண்ட காலமாக கூறி வருகின்றோம்என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அரசியல்தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.வேலையற்றப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.யுத்தம் காரணமாக ஊனமுற்றவர்களுக்கு விசேட சலுகைகள் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்