உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


1831626076S9620009காத்தான்குடி பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பிரத்தியோக வகுப்பு நடத்திய ஆசிரியையே இம்மாணவனை தாக்கியுள்ளார்.
காத்தான்குடியிலுள்ள மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த மாணவான் இவ்வாண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்