Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Unavngivetகிளிநொச்சிப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கயஸ் வாகனம் மோதியதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த உயர்தர மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் ஏ 9 வீதியில் 55ம் கட்டைப் பகுதியில் தனியார் கல்வி நிலையம் சென்று மிதிவண்டியில் வீடு நோக்கிப் பயணித்தவர்கள் மீதே இவ்வாறு கயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.மேற்படி விபத்தில் இரு பெண் மாணவிகளும் ஓர் ஆண் மாணவனுமே படுகாயமடைந்து மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

இவ் விபத்துடன் தொடர்புடைய கயஸ் சாரதியை கைது செய்த கிளிநொச்சிப் பொலிசார் சாரதி மதுப் பாவனையில் இருந்தால் என்பதனை கன்டறியும் நோக்கில் சாரதியை மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்