உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்625_117_560_350_160_300_053_800_210_160_90-14முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியையும் பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சி களைக்கப்பட போவதில்லை எனவும், அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்