உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்images2IUCB3EPஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து நேற்றிரவு நாட்டுக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 678 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளின்  பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்