உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivetஅரிசி சாத கட்லெட்

அரிசி சாதம் – 1 கப்

வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது)

பீன்ஸ், கேரட், குடைமிளகாய் – 1 கப் நறுக்கியது

வெங்காயம் – 1 நறுக்கியது

இஞ்சி – 2 டீஸ்பூன் நறுக்கியது

பச்சை மிளகாய் – 1 நறுக்கியது

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு தச்சியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும், அரிசி சாத கட்லெட் ரெடி!!!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்