உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா பல்கலைக் கழக வளாகத்தில் தலிபான்கள் நிகழ்த்திய தாக்குதலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தாகவும், 35 மாணவர்கள், 9 பொலிசார் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இங்கு மிகஉயர்ந்த சுவர்களுடன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.இங்கு வெளி நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

. இந்நிலையில், இப்பல்கலைக் கழக நுழைவு வாயில் அருகே நேற்று இரவு பாரிய குண்டுவெடித்தது. இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஆப்கான் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை காலை வரை நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் சர்வதேச ஊடகமான அசோசியேட் பிரஸ் புகைப்படக் கலைஞர் படுகாயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.காலைவரை தொடர்ந்த  இந்த மோதலில் தாக்குதல் நடத்திய 2 தலிபான்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலிபான்களின் தாக்குதலில் 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலியாகினர். 35 மாணவர்கள், 9 போலீசார் படுகாயமடைந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்