தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசுவிட்சர்லாந்து நாட்டின் ராணுவத்துக்கு சொந்தனான F/A-18C ரக ஜெட் போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில் உள்ள சுஸ்டென் என்ற இடத்தின் அருகாமையில் நேற்றிரவு சுமார் 7.35 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.ஒருவர் மட்டுமே அமர்ந்துசெல்லக்கூடிய இந்த விமானம் பனிபடர்ந்த ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென மாயமனதால் விமானத்தையும், அதிலிருந்த விமானியையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தரைவழியாகவும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

எனினும், ஆல்பைன் மலைத்தொடர் பகுதியில் நிலவிவரும் மோசமான வானிலையால் தேடுதல் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விமானத்தில் சென்றவர் உயிருடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பிரார்த்தித்து வருவதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டின் விமனப்படை தளபதி ஆல்டோ ஸ்கெல்லென்பெர்க் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்