உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஅமெரிக்க  அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையிடுகிறது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹில்லறி  கிளின்ரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நடவடிக்கைகளில் இதுநாள் வரை வெளிநாட்டு  சக்திகள்  தலையிடுவதற்கு அமெரிக்கா ஒரு போதும் அனுமதித்ததில்லை என்றும் தற்போது ரஷ்யாவின் தலையீடு உள்ளதாகவும் ஹில்லறி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்பை தேர்ந்தெடுப்பதற்கு ரஷ்யா எத்தனிக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்த ஹில்லறி கிளின்ரன் , ட்ரம்ப் குடியரசுக்கட்சி  வேட்பாளராக  தெரிவானதிலிருந்து  ரஷ்யா தலையிடுகிறது என்று தாம் கருதுவதாக தெரிவித்தார்.

அமெரிக்க  தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதை உளவுத்துறையும் சந்தேகித்து விசாரணை நடத்துவதாக வெளியான  செய்திகள்  நம்பகமானவை என்றும் ஹில்லறி கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்