உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசன என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார்.
பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. சுலோசன மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவு பட்டக் கற்கை நெறியின் இறுதியாண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்