உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesWEZM4ZGYஎதிர்காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் பொலிஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது பிரதமர் இதனை அறிவித்தார்.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக தெரிவித்தார்.

அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு முன்வரவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு 206 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இவர்கள் தற்போது வடகிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாக அறிவித்தார்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமென்று மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்